சீனாவில் நிலக்கரி சுரங்கம் வெடித்து பயங்கர விபத்து: 19 பேர் பலி

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் பாறை வெடித்து ஏற்பட்ட விபத்தில், இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் பல பகுதிகளில் அனுமதி இல்லாத நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலக்கரி சுரங்கங்களில் உரிய பாதுகாப்பு எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் ஷாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட நிலக்கரி சுரங்கத்தினுள் கடந்த 20ம் தேதி மிகப்பெரிய பாறை ஒன்று வெடித்துச் சிதறியது. இதில், சுரங்கத்தின் நுழைவாயில் மூடியது.

இந்த இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவலில் வெளியானது. இருப்பினும், நிலக்கரி சுரங்கத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இடிபாடுகளில் சிக்கி இருந்த இரண்டு உடல்களை கண்டெடுத்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

இதேபோல், இன்று மேலும் ஆறு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

More News >>