தீபாவளி ஸ்பெஷல்:சுவையான கடலை மாவு பர்பி!
கடலை மாவு தேங்காய் பர்பி இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். வெறும் 4 பொருட்களை கொண்டு ½ மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம் இதை தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்.
தேவையானவை:
கடலை மாவு - ½ கப் துருவிய தேங்காய் - ½ கப் சக்கரை - 1 கப் நெய் - ½ கப்செய்முறை:
ஒரு ட்ரேயில் நெய் தடவி தயாராக வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், ½ கப் தண்ணீர் சேர்த்து, சக்கரையுடன் மிதமான தீயில் கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவேண்டும். இந்த நிலையில் தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு, சலித்த கடலை மாவை தூவினாற்போல சேர்க்கவும். நன்கு வேகமாக கட்டி தட்டாமல் கலக்கவும். நன்கு கலந்தவுடன், ½ கப் நெய்யை, ஒரு சமயத்தில் 2 ஸ்பூன் விகிதம் ஊற்றி கலக்கவும். நெய் உள்ள வாங்கியபின் அதே போல் மேலும் இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளறவும். இதே போல ½ கப் நெய்யும் ஊற்றி கிளறிய பின், ஓரங்களில் ஒட்டாமல் வரும். முதலில் ஓரங்களில் நுரைத்தார் போலவும், பிறகு அடியில் நுரைத்தாற்போலவும் இருக்கும். பிறகு புராக் கலவையும் வெளிர் நிறமாக, நுரைத்து காணப்படும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டவும். கை பொரும் சூட்டிற்கு வரும் வரை ஆரியபின் தட்டை தலை கீழாக தட்டவும். பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு துண்டுகளாக வெட்டவும்.