சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 டீஸர் ரிலீஸ்!
இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தின் டீஸர் தற்போது ரிலீசாகியுள்ளது.
காமெடியில் கலக்கி வந்த சந்தானம் ஹீரோவான பின்னர், சில படங்கள் மட்டுமே ஓடின. பல படங்கள் சரிவர போகாத சூழல் உருவானது. இதற்கு காரணம் அவர், தனது பலமான காமெடியை குறைத்துக் கொண்டு, ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் கவனம் செலுத்த துவங்கியது தான் என பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில், தனக்கு பேய் ஹிட் கொடுத்த தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை ராம்பாலாவை வைத்தே சந்தானம் தனது ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ள படத்தின் டீஸரில், சந்தானம் தனது பழைய கலாய் காமெடி ஸ்டைலை மீண்டும் ஹீரோ சந்தானத்தில் செலுத்தி செம கிளாப்ஸ் அள்ளுகிறார்.
வடிவேலு மற்றும் சந்தானத்தின் வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாத சூழலில் தமிழகத்தில் நகைச்சுவை பஞ்சம் ஏற்பட்டது. அதனை தானே சரிசெய்கிறேன் என்ற ரீதியில் தற்போது சந்தானம் இந்த சரவெடியை இறக்கியுள்ளார்.
இந்த படம் நிச்சயம் சந்தானத்திற்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என்பது டீஸரிலேயே தெரிகிறது.