உங்க குழந்தை இப்படி உட்கார்ந்தா...அவ்ளோதான்...
குழந்தைகளின் தவறான பழக்க வழக்கங்களை ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். இல்லாவிட்டால் அதுவே அக்குழந்தைக்கு பெரும் கேடாய் விளங்கும். குறிப்பிட்டு சொல்கையில் குழந்தைகள் உட்காரும் போது, அவர்கள் எவ்வாறு மற்றும் எந்நிலையில் உட்காருகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சில குழந்தைகள் W வடிவில் கால்களை வைத்து தரையில் அமருவார்கள் இது மிகவும் மோசமான நிலையாகும்.
'W' வடிவத்தில் கால்களை வைத்து குழந்தைகள் பல மணி நேரம் அமரும் போதும், இந்நிலையிலேயே விளையாடும் போதும் குழந்தையின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கும்.
எலும்பு பிரச்சனை:
குழந்தைகள் தினமும் 'W' வடிவில் கால்களை வைத்து அமரும் போது, அது குழந்தையின் உள் இடுப்பு சுழற்சி மற்றும் தீவிர எலும்பியல் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
தசை சிதைவு:
குழந்தைகளின் இதுபோன்ற அமரும் முறையினால் தசைகள் சிதைவுறச் செய்வதோடு, சுருங்வும் செய்து, எலும்புகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது.
மற்ற பாதிப்புகள்:
இந்நிலையில் அமர்ந்தால், உடலின் ஈர்ப்பு மையம் அதிகப்படியான புவி ஈர்ப்பு விசையின் விளைவால், உடறௌபகுதியில் உள்ள தசைகளால் உடலை சமநிலையில் பராமரிக்க முடியாமல் செய்துவிடும்.
தடுப்பு முறைகள்:
குழந்தைகளுக்கு இம்மாதிரியான கொடிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் 'W' வடிவில் அமரும் பழக்கத்தைத் தடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் அமரும் போது, அந்நிலையில் அமர்வதைத் தடுத்து, கால்களை நீட்டியோ அல்லது கால்களை மடக்கியோ அமர்த்த முயற்சி செய்யுங்கள்.