பிரபல துணிக்கடையில் திடீர் ரெய்டு, அதிர்ச்சியில் முதலாளி.
சென்னையில் புகழ் பெற்ற துணிக்கடைகளுள் ஒன்று, சென்னை குமரன் சில்க்ஸ் ஆகும். இத்துணிக்கடையில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று படையெடுத்து ஆய்வு நடத்தினர். இதன் காரணமாக அக்கடை முதலாளி பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
சென்னையில் குமரன் சில்க்ஸ் தியாகராய நகர் நாகேஸ்வர ராவ் சாலையில் உள்ளது. தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதோடு இந்த ஆய்வில் கடையின் ஆண்டு வருமானம் மற்றும் அதற்கான வரிஉள்ளிட்ட முக்கிய ஆவண அம்சங்களை 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனை செய்து வருகின்றனர்.
சோதனையை மேற்கொண்ட அதிகாரிகள், இந்த சோதனையை சந்தேகத்தின் பெயரிலோ அல்லது புகாரின் அடிப்படையிலோ நடத்தப்பட்டு வரும் சோதனை அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கமான ஆவண சரிபார்ப்பு மட்டுமே என்று தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரிகள் தனது சோதனையை மேலும் தொடர்ந்தனர்.