தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 5ம் தேதி விடுமுறை விடுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், தீபாவளி பண்டிகை அன்று அரசு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிககை முன்னிட்டு வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி, அதாவது தீபாவளியின் முந்தைய நாளும் அரசு விடுமுறை என்றும் நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக, வரும் 10ம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்பட அரசு அலுவலகங்களுக்கும் நவம்பர் 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4 நாள் விடுமுறையால் வெளியூர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.