திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு முன் விவசாயி தன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலசபாக்கம் அருகே உள்ள வில்வராணி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் திரு.சங்கரன், அவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுடைய மகன் கார்த்திகேயன்.
இவர்கள் மூவரும் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தின் வாசலின் முன் நின்று தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
அங்கு பாதுகாப்பிற்காக இருந்த காவலர்கள் அந்த மூவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீப்பெட்டியை அவர்கள் கையிலிருந்து பிடுங்கியுள்ளனர்.
இதற்கான காரணத்தை கேட்டபொழுது, அதே பகுதியை சார்ந்த ஒருவர் தங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாகவும், இதுப்பற்றி கலசபாக்கம் காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் காவல் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதாக கூறியுள்ளனர்.
மூவரையும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இதுப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்