நாட்டின் மிக அதிவேக ரயில் ரயில் 18 சென்னையில் அறிமுகம்
இந்தியாவின் மிக அதிவேக ரயிலான ரயில் 18 சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாகக்கப்பட்ட மிக அதிவேக ரயிலான ரயில் 18 நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இன்ஞின் இல்லாமல் இயங்கக்கூடிய, நாட்டின் அதிவேக ரயிலான சதாப்தி விரைவு ரயிலின் சாதனையை முறியடித்து, அதனை விட 15 சதவீதம் பயணம் நேரம் குறைவாக இருக்கும்.
160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் சென்னையில் ஐசிஎப்பில் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதற்கான அறிமுக விழா நேற்று பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் நடைபெற்றது.
இதுகுறித்து பொறியாளர் உதயகுமார் கூறுகையில், சென்னையில் சோதனை ஓட்டங்கள் முடிந்த பிறகு டிரெயின் 18 ரயில் வரும் நவம்பர் 7ம் தேதி டெல்லி சென்றடையும், பிறகு, மொராதாபாத்-பரேலி இடையிலும், கோடா-சவாய் மதோபூர் இடையில் சோதனை ஓட்டங்கள் நடைபெறும் என அவர் கூறினார்.