பெண் குழந்தை பெற்றெடுத்த பிரிட்டன் ஆண்
பிரிட்டனைச் சேர்ந்த, 21 வயது ஆண், விந்தணு தானத்தால் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஹேடன் கிராஸ் ( வயது 21). இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெர்ம் தானம் வழியாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கடந்த ஜூலை16ம் தேதி அவருக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. கிளாஸ்டர்ஷயரில் உள்ள மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தைக்கு டிரினிட்டி லெயா என பெயர் சூட்டப்படுள்ளது.
இவர், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். கடந்த 3 ஆண்டுகளாக ஆணாக வாழ்ந்து வருகிறார். இவர், தனது கருமுட்டைகளை பாதுகாத்து வைத்துள்ளார். வருங்காலத்திலும் விந்தணு தானம் வழியாக குழந்தை பெற்றுக் கெள்ளத் திட்டமிட்டுள்ளார்.