உண்மையை ஒப்புக்கொண்ட ஏ.ஆர். முருகதாஸ்! சர்கார் என்னுடையது அல்ல

சர்கார் படத்தி கதை வருண் ராஜேந்திரனுடையது என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஒப்புக்கொண்டது மேலும் எழுத்தாளர் சங்கத்தின் லெட்டர் பேடு மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதை தொடர்ந்து சர்கார் திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய ஜெயமோகன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘சர்கார் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதல்ல என்றும் கள்ள ஓட்டு என்ற ஒரு பிரபலமான ஒற்றை வரியை வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையின் ஏ.ஆர். முருகதாஸ் "சர்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் எனவும், படத்தின் துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு அவருடைய பெயர் வெளியிடப்படும்" என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் இயக்கியுள்ள "சர்கார்" படம் "செங்கோல்" படத்தின் கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி துணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வரும் 30ம் தேதிக்குள் முருகதாஸ் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குநர் முருகதாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், சர்கார் பட துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு வருண் ராஜேந்திரனின் பெயரை வெளியிடவும் நீதிமன்றத்தில் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக்கொண்டார்.

More News >>