திமுகவை அழிக்க கருணாநிதியிடமே வாழ்த்து பெற்றார் ரஜினிகாந்த் - பொன்னையன்

ரஜினிகாந்த் கலைஞரிடமே போய், இந்த கட்சியை, உங்க கொள்கைளை அழிக்கத்தான் நான் கட்சி தொடங்குகிறேன் என கூறியதுபோல் உள்ளது என்று தமிழ்நாடு தற்சார்பு விவசாயிகள் அமைப்பு தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பொன்னையன் அளித்துள்ள பேட்டியில், “திராவிட இயக்கம், அதன் கொள்கைகள் இனம், மொழி, பகுத்தறிவு, சமூக நீதி இந்த கோட்பாடுகளை தமிழ் மண்ணில் பரப்பி நிற்கிறது. அந்த திராவிட இயக்கத்தினுடைய பிதாமகன் திமுக தலைவர் கலைஞர்.

இதற்கு நேர் எதிரான கொள்கை கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஏனென்றால் அவர் அறிவித்துள்ள அரசியல் ஆன்மீக அரசியல். ஆன்மீக அரசியல் என்று எதுவுமே இல்லை. மதவாதத்தின் முகமூடிதான் ஆன்மீக அரசியல்.

திமுக தலைவர் கலைஞரை ரஜினிகாந்த் ஏதோ பிறந்த நாளுக்கோ, அவரது திருமண நாளுக்கோ வாழத்து பெறவில்லை. தனிக் கட்சி தொடங்குவதாக சொல்லி கலைஞரிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார். அந்த தனிக்கட்சி திராவிட இயக்கத்திற்கு நேர் எதிரான கொள்கை கொண்டது. இவர் கலைஞரிடமே போய், இந்த கட்சியை, உங்க கொள்கைளை அழிக்கத்தான் நான் கட்சி தொடங்குகிறேன் என கூறியதுபோல் உள்ளது.

திமுக, ரஜினியை கலைஞர் வீட்டுக்குள் அனுமதித்திருக்கக் கூடாது. இந்த காலத்தில் ஒரு மளிகைக்கடக்காரர், அருகே ஒரு மளிகைக்கடை வந்தால்கூட இருவரும் பகையாளியாகி பேசமாட்டார்கள்.

ஆனால் ஒரு கட்சியை அழிக்க அந்த தலைமையிடமே போய் ஆசிர்வாதம் வாங்குவது என்பது திமுக தொண்டர்களை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இது திமுகவின் அணிகள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

More News >>