இத்தனை நாடுகளில் ரிலீசாகிறதா சர்கார்?
விஜய்யின் மெர்சல் படத்தை விட சர்கார் படம் உலகளவில் அதிக நாடுகளில் திரையிடப்படும் விஜய் படம் என்ற பெருமையை பெறுகிறது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலஷ்மி சரத்குமார் உள் ளிட்டோர் நடித்துள்ள சர்கார் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு திரைக்கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம், சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகமெங்கும் சுமார் 80 நாடுகளில் வெளியாக இருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மெக்சிகோ, போலந்து, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் படத்தை வெளியிடுகின்றன. தமிழ், தெலுங்கிலும் படம் அதிக திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
சர்கார் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். மேலும், தாக புமி குறும்படத்தை தான் கத்தி என ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார் எனவும் அவருக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் எனவும் குறும்பட இயக்குநர் ஒருவரும் புகார் அளித்துள்ளார். கத்தி படம் தன்னுடைய கதை என ஏற்கனவே அறம் பட இயக்குநர் கோபி நயினார் கூறிய நிலையில், குறும்பட இயக்குநர் ஒருவரும் புகார் அளித்துள்ளார். இத்தனை எதிர்ப்புகளையும் சரிகட்டி விட்டு சர்கார் தீபாவளிக்கு ரிலீசாகும் என ரசிகர்கள் திடமாக நம்புகின்றனர்.