டைட்டில் கார்டில் வருண் பெயர் இடம்பெறாது சர்கார் கதை என்னுடையது தான்: ஏ.ஆர். முருகதாஸ்!
சர்கார் படத்தின் கதை வருண் என்கிற ராஜேந்திரனின் செங்கோல் கதை தான் என ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக செய்திகள் பரவின. வருணும் எனது செங்கோலை வைத்து விஜய் சர்கார் படைக்கட்டும் என ஐகோர்ட்டுக்கு வெளியே பேட்டியளித்தார்.
இந்நிலையில், சர்கார் படத்தின் ஒரு மைய கரு மட்டுமே இருவர் சிந்தனையிலும் ஒத்தாக உதித்த ஒன்று. எனக்கு முன்னதாக வருண் பதிவு செய்ததால், அவருக்கு அது குறித்த கடிதம் ஒன்று மட்டுமே வழங்கப்படும்.
டைட்டிலில் வருண் பெயர் வராது. சர்கார் படத்தின் கதை திரைக்கதை வசனம் ஏ.ஆர். முருகதாஸ் மட்டுமே. வதந்திகளை கண்டு ஏமாறவேண்டாம் என முருகதாஸ் தனது ட்விட்டரில் தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். மேலும், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.