குடும்பம் நடத்த இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெற்றோர்
விருதுநகர் மாவட்டத்தில்குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூரை சேர்ந்த திவாகரன் அப்பகுதியில் வசித்த சுபாஷினியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை திருமணம் செய்வதாக கூறி சுபாஷினியை கர்ப்பமடைய செய்துள்ளார். அதன்பின் அவரை திருமணம் செய்ய திவாகர் மறுத்துள்ளார். இதனால் சுபாஷினி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து திவாகரனை சிறையில் அடைத்துள்ளனர்.
கர்ப்பமாக இருந்த சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் சிறையிலிருந்த திவாகரன் ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் சுபாஷினியுடன் நெருங்கி பழகினார். இதையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் இருக்கன்குடி காவல்நிலையத்தில் திருமணம் நடைப்பெற்றது.
திருமணம் நடந்த பின்னர் திவாகரன் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என சுபாஷினியிடம் கூறி அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் காலையில் குழந்தையின் கண், மூக்கில் மிளகாய் பொடி தூவப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்துள்ளது.
தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது திவாகரன் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. எனவே குழந்தையை அவர் கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
திவாகரனை பிடித்த காவல்துறையினர் விசாரனை செய்கையில் சுபாஷினியே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. என் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறி பிரச்சினை செய்து வந்தார்.
குடும்பம் நடத்த குழந்தை பிரச்சினையாக இருந்ததால் என் குழந்தையை கொன்றேன் இதற்கு உடந்தையாக கணவரும் இருந்ததாக சுபாஷினி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் கணவன் மனவியை கைது செய்தனர்.