டெங்கு: சுகாதாரமற்ற 5 தொழிற்சாலைகளுக்கு இரண்டரை லட்சம் அபராதம்

டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்று இருக்கும் 5 தொழிற்சாலைகளுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காக்களூர் உள்ள 350 தொழிற்சாலைகளில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, டெங்கு கொசுகள் உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கு சுமார் இரண்டு லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இந்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

More News >>