சாமி ரிலீஸான அதே தேதியில் சாமி ஸ்கொயர்
ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா, விவேக், கோட்டா சீனிவாசன், விஜயகுமார், மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் சாமி. கடந்த 2003ம் ஆண்டில் வெளியான இந்த படம் ஹிட் ஆனது.
இந்நிலையில், இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் இயக்குனர் ஹரி.
இந்த படம் கடந்த 2003ம் ஆண்டு மே 1ம் தேதி ரிலீஸ் ஆனது. சாமி படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், சாமி ஸ்கொயர் என்று சாமியின் இரண்டாம் பாகத்தின் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சாமி ஸ்கொயரில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, ஜான் விஜயம், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படம் ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று கூறி வந்த நிலையில், முன்பு சாமி படம் ரிலீஸ் செய்யப்பட்ட மே 1ம் தேதி அன்றே 15 ஆண்டுகளுக்கு பிறகு சாமி ஸ்கொயர் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.