பீகார் மருத்துவமனையில் அலட்சியம்: எலி கடித்து பச்சிளம் குழந்தை பலி

பீகார் மாநில அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாளே ஆன குழந்தை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகார் மாநிலம் நஜ்ரா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, பீகார் மாநிலத்தில் தர்பங்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆரோக்கிய பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு பெண் சென்று பால் கொடுத்து வந்தார்.

அதேபோல், நேற்று காலை எழுந்து குழந்தைக்கு பால் கொடுக்க சென்றபோது, அவரது குழந்தை ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், குழந்தைகளின் கை, கால்களில் எலி கடித்த அடையாளம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் கதறி அழுதார். மேலும், மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது குழந்தை இறந்துவிட்டதாக பெண் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம்சாட்டினார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், குழந்தைக்கு இதய குறைபாடு இந்ததனால்தான் தீவிர சிகிச்சை பிரிவில வைத்து இருந்ததாகவும், அதனால் தான் குழந்தை இறந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அம்மாவட்ட மாஜிஸ்திரேட் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

More News >>