காற்று மாசு எதிரொலி: டெல்லியில் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி பயன்படுத்த தடை

டெல்லியில் காற்று மாசு அதிகளவில் உள்ளதால், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு அதிகளவில் இருப்பதாக உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனிதர்கள் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றின் நிர்ணயிக்கப்பட்ட அளவு டெல்லியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காற்றின் சுத்தமா அளவு 50க்குள் இருந்தால் நல்ல காற்று என்றும் 51-100க்குள் இருந்தால் திருப்தி என்றும், 101-200 இருந்தால் மிதமானது என்றும், 201-300 இருந்தால் மோசமானது என்றும் 301-400 இருந்தால் மிக மோசமானது என்றும், 401-500 இருந்தால் மிக மிக மோசமானது என்றும் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், டெல்லியில் நேற்று பகல் 3 மணி அளவில் 401 என்ற அளவை எட்டியது. மிக மிக மோசமான நிலையை டெல்லி மக்கள் சந்தித்து வருவதால், காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஊதிபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என கூறி அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய அரசின் காற்று தர கணிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சபார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறை ஜன்னல்களை மூடி, அடிக்கடி வீட்டை ஈரத்துணியால் துடையுங்கள். விறகு கட்டை, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஆகியவற்றை கொளுத்துவதை நிறுத்தி வையுங்கள். மக்கள் வெளியே செல்லும்போது என்-95 முகமூடிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More News >>