தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கியது

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு நவம்பர் 5ம் தேதியும், 6ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர்ந்து வரும் விடுமுறையால் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக, தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் 3ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் மற்றும் மாதவரம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்காக, சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய சிறப்பு முன்பதிவு மையத்தை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று திறக்கப்படுகிறது. இதனை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைக்கிறார்.

வெளியூர் செல்லும் மக்கள், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லவும், பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் இங்கு முன்புதிவு செய்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>