உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலை திறந்துவைத்தார்பிரதமா் நரேந்திர மோடி!

நா்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சா்தாா் வல்லபாய் படேல் சிலையை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதரான சா்தாா் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. 33 மாதங்களாக வடிவமைக்கப்பட்ட இச்சிலை தான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.

சா்தாா் சரோவா் அணை அருகே 182 மீட்டா் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வல்லபாய் படேல் சிலையை பிரதமா் நரேந்திர மோடி வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று (31ம் தேதி) திறந்துவைத்தார். விழாவை முன்னிட்டு இந்திய விமானப்படையின் கண்கவா் சாகச நிகழ்ச்சிகள், கலாசாரம் தொடா்பான நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் அப்போதைய உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வல்லபாய் படேல் சிறு சிறு பிராந்தியங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் மிக முக்கியமானவராக திகழ்கிறாா். அவரது பணியை போற்றும் வகையில் இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து "மன் கி பாத்" (மனதின் குரல்) உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என கூறி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

இந் நிலையில் அங்கு "statue of unity" என்னும் பெயரை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். அதில், தமிழில் "ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி" எனத் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டவுடன் தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் அழித்துள்ளனர். இந்த செயல் தமிழ் ஆர்வளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது

More News >>