டைட்டானிக் 2 தனது பயணத்தை 2022ல் தொடங்கும்!
வரலாற்றில் இடம்பெற்ற சோகத்தின் ஒன்றாக டைட்டானிக் உல்லாச கப்பல் மூழ்கிய சம்பவம் யாராலும் மறக்கமுடியாது. டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகளை கடந்துவிட்டாலும் மக்கள் அதை மறக்கவில்லை அதை பற்றிய செய்திகள் இன்னமும் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது.
இந்த நிலையில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு புதிய டைட்டானிக் கப்பலை உருவாக்கும் பணிகள் நடந்து வருவது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்று அதே உருவத்தில் டைட்டானிக் 2 உருவாக்கப்பட்டு வருகிறது. டைட்டானிக்௧ கப்பல் பயணித்த அதே பாதையில் டைட்டானிக் 2 கப்பல் வரும் 2022-ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்க உள்ளது.
கடந்த 1915-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு டைட்டானிக் கப்பல் புறப்பட்டது. ஆனால் கப்பல் புறப்பட்ட 5 நாட்களில் ஏப்ரல் 15-ம் தேதி அட்லாண்டிக் கடற்பகுதியில் பயணித்தபோது பனிமலையில் மோதி கப்பல் மூழ்கியது. இந்தக் கப்பலில் பயணித்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளில் 1500 பேர் இறந்துவிட்டாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய பால்மரின் கருத்து:
புதிய டைட்டானிக் கப்பலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான க்ளைவ் பால்மரின் புளூஸ்டார் லைன் கப்பல் போக்குவரத்து நிறுவனம்தான் இந்த கப்பலை உருவாக்கி வருவது குறிப்பிடதக்கது.
"இந்தக் கப்பல் கட்டுமானத்தின் ஒட்டுமொத்த செலவு 50 கோடி டாலர்(இந்திய மதிப்பில் ரூ.3,658 கோடி). முதலாவது டைட்டானிக் கப்பலில் பயணித்த அதே அனுபவம்,வசதிகள் இருக்கும், 21 நூற்றாண்டுக்கான பாதுகாப்பு அம்சங்கள் அதிகப்படுத்தியிருக்கிறோம்". என்று தெரிவித்தார்.