திருப்பதியில் இதை பயன்படுத்தினால் 5000 முதல் 25000 வரை அபராதம்!
திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த நாளை(1நவம்பர் 2018) முதல் தடை விதித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாளை முதல் திருப்பதியின் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்ப்டுவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "திருமலையில் வரும் நவம்பர் 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்கிறது. உத்தரவை மீறுவோருக்கு ரூ. 5000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
எனவே கடைகள், ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமும் ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேவஸ்தானத்தில் இந்த முடிவுக்கு பக்தர்கள், கடை உரிமையாளர்கல் ஒத்துழைக்க வேண்டும்" என அறிவித்துள்ளார்கள்.