வயிற்று புண்ணா? இது சாப்பிட்டா சரி ஆயிடுமா?!

காலை உணவை தவிர்க்கும் ஜீவராசிகளான நமக்கு வயிற்றுப் புண் வருவது எளிதுதான், ஆனால் கண்டுக் கொள்ளாமல் விட்டால் அதனால் ஏற்படும் விளைவோ ஆபத்தானது. சரி, குறிப்பிடப்படும் எளிய வீட்டு பொருட்களை வைத்து சரி செய்யலாம் வாங்க.

வயிற்று புண் ஆற சுண்டைக்காய் வற்றலை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புண் ஆறி வலி குறையும்.

மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் ஒரு சிட்டிகை மாங்கொட்டை பொடியை எடுத்துக் கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஆறிவிடும்.

மாதுளை பழத் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை  மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வர வயிற்றுப்புண் ஆறும்.

வாரம் இருமுறை இலவங்கப் பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் மூலம் உண்டாகும் வயிற்றுவலி நீங்கும்.

பாகற்காயின் விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஆறும்.

மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.

மிளகைப் பொடி செய்து சலித்துக் கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இதன் மூலம் அல்சரை குணப்படுத்தலாம்.

அகத்திக் கீரையை வேக வைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.

வயிற்றுப்புண் ஆற பீட்ரூட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் விரைவில் குணமடையும்.

சுக்குத் தூளை சிறிது எடுத்துக் கொண்டு அதை கரும்புச் சாறுடன் கலந்து குடித்தால் வயாற்றுப்பபுண் ஆறும்.

வால்மிளகைப் பொடி செய்து பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்.

More News >>