இலவச சர்க்கரை, ரூ.1000 தீபாவளி பரிசு:புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி

புதுசேரி மாவட்டத்தில் தீபாவளிக்கு மக்களுக்கு என்ன வழங்கலாம் என்று பலமுறை ஆலோசித்தப் பின்னர் கடைசியாக அம்மாவட்ட அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு தீபாவளி அன்று சர்க்கரை வழங்க திட்டமிட்டனர் ஆனால் ஆளுநர் கிரண்பேடி கொடுக்க அனுமதிக்கவில்லை.

இதனால் இந்த ஆண்டு கட்டாயம் எப்படியாவது வழங்க வேண்டும் என்ற நோக்கோடு புதுச்சேரி அரசு செயல்பட்டுள்ளது.  அதன்படி புதுச்சேரி அரசு மக்களுக்காக இந்த சூப்பர் பரிசை கொடுத்துள்ளது.

புதுச்சேரி வாழ் அனைத்து மக்களின் ரேசன் கர்ட்டுகளுக்கும் இலவச சர்க்கரை,  துணிக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சரி, இதை பற்றிய விரிவான தகவலைப் பார்ப்போம். தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மாவட்டத்தில் ரேஷன்கார்ட் வைத்துள்ள  அனைத்து மக்களுக்கும் இலவச வேட்டி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த தீபாவளிக்கு பணமாக வழங்க எம்.எல்.ஏக்கள் கூறியதால்,  ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக ரேசன் கார்ட் வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 வழங்க முடிவு செய்துள்ளது.

இத்தொகை ரேசன் ரேசன் கார்ட் வைத்துள்ள அனைத்து குடும்பதலைவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அதோடு ஓரிரு நாட்களில் இத்தொகையை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற இத்தகவலையும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

More News >>