தீபாவளி ஸ்பெஷல்: ஆரோக்கியமான கேழ்வரகு லட்டு.
தீபாவளிக்கு இன்னும் சில தினங்கள் தான் உள்ளது ஆரோக்கியமான கேழ்வரகு லட்டு எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
ராகி மாவு: ஒரு கப் சர்க்கரை : ஒரு கப் நெய்- கால் கப் சூடான பால்- 3 அல்லது 4 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன் முந்திரி- தேவையான அளவு.செய்முறை:
முதலில் சர்க்கரயை நன்றாக பவுடராக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் வறுத்தெடுக்கவும், ராகி மாவைச் மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து ஆறவைக்கவும். சூடு ஆறியதும் அதில் சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி ஏலக்காய்த்தூள், சூடான பால் சேர்த்து நன்கு கலக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு மாவை லட்டுகளாகப் பிடிக்கவும். குறிப்பு- சர்க்கரைக்குப் பதில் நாட்டு வெல்லம் பயன் படுத்தலாம்