தோனி ஒரு ரன் எடுத்தாலும் சாதனை தான் இன்று 5வது ஒருநாள்!

மேற்கிந்திய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இதுவரை நான்கு போட்டிகள் விளையாடியுள்ள இந்திய 2-1 என முன்னிலை வகிக்கின்றது. இன்றைய போட்டத்தில் வெற்றியோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிடும். அதே சமயம் மேற்கிந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கேப்டன் விராத் கோலி மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா இருவரும் இந்த தொடரில் அபாரமான ஃபார்மில் உள்ளனர். இவர்களை அடுத்து அம்பத்தி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவான், தோனி, கேதார் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் இதுவரை தங்களின் திறமையை பெரிதாக வெளிக்காட்டவில்லை.

இன்றைய போட்டியில் தோனி ஒரு ரன் எடுத்தாலே 10,000 ரன்களை கடந்த புதிய சாதனையை புரிவார். கடந்த போட்டியிலேயே தோனி இந்த சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 331 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 10,173 ரன்கள் குவித்துள்ளார். இதில், 174 ரன்கள் ஆசிய அணிக்காக அவர் எடுத்ததால், இந்திய அணிக்காக அவர் எடுத்துள்ள ரன்கள் 9,999 என்ற விலைப்பட்டியல் போல் நின்று கொண்டிருக்கின்றது. இன்றைய போட்டியில், இந்த மைல் கல்லை தோனி எட்டுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

இந்த சாதனையை படைத்தால் 10,000 ரன்களை கடக்கும் 5வது வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார்.

More News >>