சன்னிலியோன் ஸ்டைலில் ஷகிலாவின் பயோபிக்கும் ரெடியாகுது!

தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்து இழுத்த ஆபாச பட நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு பயோபிக் திரைப்படமாக உருவாகிறது.

ஆபாச நடிகை சன்னிலியோனின் பயோபிக், கரஞ்சித் கவுர் எனும் தலைப்பில் ஜி5 வெப்சீரியஸாக இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன. இதில், தனது பயோபிக்கில் சன்னிலியோனே நடித்திருந்தார். சிறுவயது கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகை நடித்திருந்தார்.

இதேபோன்ற பாணியில், கவர்ச்சி நடிகை ஷகிலாவின் பயோபிக்கும் உருவாகி வருகிறது. இந்திரஜித் லங்கேஷ் ஷகிலாவின் வாழ்க்கை பற்றி தெரியாத விஷயங்களை கொண்டு இந்த பயோபிக்கை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷகிலாவாக ரிச்சா நடித்துள்ளார்.

இப்படத்தின் உருவாக்கத்தில் ஷகிலா பணியாற்றுகின்றார். தன்னை பற்றியும், தன் வீட்டை சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நடிகை ரிச்சாவும் ஷகிலாவுடன் நெருங்கி பழகி அவரது உடல்மொழிகளை கற்று வருகிறார்.

மேலும், ஷகிலாவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபாச நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால், இதுபோன்ற பல படங்கள் எடுக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

More News >>