ராக்கெட்ரி: இது மாதவன் விளைவு!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் டீஸர் நேற்று வெளியாகி வைரலாகியுள்ளது.

இப்படத்தில், கேரளாவை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணாக மாதவன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தை இயக்கி வரும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து இயக்கவும் செய்துள்ளார் மாதவன். இப்படத்தின் மூலம் மாதவன் முதன்முறையாக இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

வெளிநாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வெளியிட்டதாக கூறி இந்தியாவின் சிறந்த விஞ்ஞானியை சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்தபோது, முதன்முதலாக ராக்கெட் பறப்பதை சிறைச்சாலை வழியாக அவர் பார்க்கும் காட்சியை டீஸரில் வெளியிட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

More News >>