உத்தரவை வாபஸ் பெற்றார் சிறிசேனா: வரும் 5ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

ஐநா மற்றும் உலக நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கும் உத்தரவை இலங்கை அதிபர் சிறிசேனா திரும்பப்பெற்றார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி நடந்ததாக விக்ரமசிங்கே கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது. விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனா அறிவித்தார். இதனால், ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமராக முன்னார் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நானே பிரதமர் என ரணில் அறிவித்தார். மேலும், தனது பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் முயன்றால், ராஜபக்சே தோல்வியடைக்கூடும் என்பதால், இலங்கை நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நாட்டின் சட்டப்பூர்வ பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தான் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அங்கீகரித்துள்ளார். இதன் எதிரொலியாக, ரணிலுக்கு ஆதரவாக இலங்கையில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேலும், இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சட்டப்படி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனுறு ஐநா மற்றும் உலக நாடுகள் சிறிசேனாவை அறிவுறுத்தி வந்தன.இந்நிலையில், நாடாமன்றத்தை முடக்கும் உத்தரவை அதிபர் சிறிசேனா திரும்பப்பெற்று, வரும் 5ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டவும் உத்தரவிட்டார்.

More News >>