விடிய விடிய கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையால், கடலோர மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் எதிரொலியால், மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவி வருகிறது.

இதேபோல், இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவி வருகிறது. இதேபோல், இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மூன்று மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

More News >>