பிறந்தநாள் முன்னிட்டு நடிகர் ஷாருக்கான் வீட்டை சூழ்ந்த ரசிகர்களால் பரபரப்பு

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக நள்ளிரவு குவிந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது, பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக்கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

ரசிகர்கள் கூடிய தகவலை அறிந்த ஷாருக்கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை கோஷமுடன் தெரிவித்தனர். ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்ற ஷாருகான் மகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்தார்.நள்ளிரவில் ரசிகர்கள் குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>