குத்துச்சண்டை வீராங்கனையுடன் சண்டையிட்ட மத்திய அமைச்சர்

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பயிற்சி வழங்கியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு விளையாட்டுத்துறையை மேம்படுத்தி வருகிரார். அவர் மேற்கொண்ட முயற்சிக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 5 முறை உலகச் சாம்பியன் பட்டமும் மேலும் பல்வேறு சாதனைகளை படைத்த குத்துச்சண்டை வீராங்கலை மேர்கோம்க்கு மத்திய அமைச்சர் பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்றை மேர்கோம் தனது ட்விட்டர் பக்கத்துல் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மேரிகோம் அமைச்சர் ராஜ்யவர்தனை குத்துகிறார், அவர் தடுக்கிரார், மீண்டும் அமைச்சர் குத்துகிறார்,மேரிகோம் அவர் தடுக்கிரார். ஒரு ஜாலியான குத்துச்சண்டைக்கான பயிற்சியை வழங்குகிறார், இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேரிகோம் "உங்களது ஆதரவுக்கும், உற்சாகத்துக்கும் நன்றி என அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்க்கு பதில் அளித்துள்ளார்

More News >>