மீண்டும் மோடி ஆட்சி: மக்கள் கருத்துக்கணிப்பு
63% சதவீத மக்கள் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் மறுபடியும் அவரே பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
'டெல்லி ஹன்ட்' மற்றும் நீல்சென் ஆகிய இணையதள செய்தி நிறுவனங்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் சுமார் 54 லட்சம் மக்களிடம் ஆன்லைன் மூலமாக கருத்துக்கணிப்பை நடத்தியது.
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு ஆட்சி தொடர்பாக 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர் மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டாவது முறையாக மோடி பிரதமரானால் தங்களது எதிர்காலம் சிறப்பாக என 65 சதவீத மக்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடி அரசுக்கு எதிரான காங்கிரஸ் இந்த கருத்துக்கணிப்பை தாங்கமுடியாமல் இவை அனைத்தும் பொய் தகவல் என்றும் வீண்வேலை என்றும் நிராகரித்து வருகின்றது.
இந்த இரண்டு தலைவர்களில் எவர் வந்தாலும் சரி மக்களின் பணத்தை வீணடிக்காமல் இருந்தால் சரிதான்.