மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான மாரி படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இருந்தாலும், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் முடிவு செய்தனர். முதல் பாகத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரோபோ சங்கர் காமெடியனாக நடித்திருந்தார். அனிருத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது.
மாரி 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவில்லை. சாய் பல்லவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர். முக்கியமான வேடத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார். ரோபோ சங்கர் இந்த படத்திலும் நடித்துள்ளார். அனிருத்திற்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கையில் பட்டாசை சுண்டி விட்டு ஸ்டைலாக லுக் விடும் மாரி போஸ்டர் ரிலீசாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படம் ரிலீசாக உள்ளது.