பாக்யராஜ் தான் தலைவர் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் திட்டவட்டம்!
மூத்த இயக்குநர் மற்றும் ஆசியாவின் சிறந்த கதையாசிரியருமான கே. பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை சர்கார் விவகாரம் காரணமாக ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதென தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது.
பாக்யராஜே தலைவராக தொடரவேண்டும் என தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தினர் ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
பாக்யராஜ் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சரியாகவே செய்ததாகவும், அவர் ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.