மேரி கோமுடன் குத்துசண்டையிட்ட ரஜினிகாந்த்
அனைவரும் நன்கு அறிந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் சென்னை நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார். அதோடு நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பு துறையில் தன் கால் தடத்தை பதித்ததோடு, தற்போது அரசியலிலும் களம் இறங்கியுள்ளார். ரஜினியின் மனைவி திருமதி.லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா என்னும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் சார்பில் அங்கு இருக்கும் குழந்தைகளுக்காக சென்னையில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை இன்று நடத்துகிறார்கள்.
இதில் பங்கேற்பதற்காக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ரஜினி காந்தை சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை போடுவது போன்ற புகைப்படத்தையும் அவருடன் எடுத்துள்ளார்.
தற்போது அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி கொண்டு வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுடன் கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடைப்பெற்று வருகின்றன.