2.0 டிரெய்லர் நாளை ரிலீஸ்!
ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3டி டிரெய்லர் நாளை ரிலீசாகிறது.
400 கோடி ரூபாய்க்கும் மேல் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தியாவின் மெகா பட்ஜெட் படம் 2.0. இப்படம் இந்த மாதம் 29ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தின் 3டி டிரெய்லர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு ஒன் டே டு கோ என்ற இரு போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போஸ்டரில் பறவைகள் நிறைந்த கருப்பு அறையில் நம்பர் ஒன்று தெரியும் படி கதவை திறந்து ரஜினி வருவது போன்ற ஒரு போஸ்டரும், அதே போல், அக்ஷய் வருவது போன்ற ஒரு போஸ்டரும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயமோகன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 3 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இரு பாடல்கள் ரிலீசாகியுள்ள நிலையில், மூன்றாவது பாடல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.