இந்தியாவில் அமெரிக்காவின் மாஸ்டர் கார்ட் மவுசு குறைந்தது!

பிரதமர் மோடி ரூபே கார்டை பிரபலப்படுத்தி வருவதால் அமெரிக்காவின் மாஸ்டர் கார்ட் உபயோகம் குறையத்தொடங்கியது, இதனால் எரிச்சலடைந்த மாஸ்டர்கார்ட் நிறுவனம், டிரம்ப்யிடம் புகார் அளித்துள்ளது.

ரூபே கார்டு இந்திய தேசிய கட்டண நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கட்டண அட்டை திட்டமாகும் ரூ என்றால் ரூபாய் என்றும் பே என்றால் பேமெண்ட் என்றும் அர்தமாகும், இந்த அட்டையை மத்திய அரசு 2012 மார்ச் 26ல் அறிமுகம் செய்தது குறிப்பிடதக்கது.

ரூபே கார்டு முறையில் அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும்,வெளிநாட்டு நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக அளித்து வருகின்றது,இது தவிர பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் பொதுமக்கள் நாட்டுக்கு சேவையாற்ற விரும்பினால் ரூபேவை பயன்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்து மேலும் பிரபலப்படுத்துகிறார்  இதனால் ரூபே பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் அமெரிக்கா வின் மாஸ்டர் கார்ட் நிறுவனம் அமெரிக்க வர்த்தகத்துறையிடம் கூறியிக்கிறது. மாஸ்டர் கார்டு பயன்பாடு அதிகரிக்க என்ன செய்யப்போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

More News >>