கும்பகோணம் ஆசிரியை படுகொலை: மாமன் மகன் கைது

திருவிடைமருதூரில் ஆசிரியை வசந்த பிரியா கொலை வழக்கில் அவரை கொலை செய்து விட்டுத் தப்பிய அவரது மாமா மகன் நந்தகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.நிச்சயதார்த்தம் முடிந்து 5 நாள்தான் ஆன நிலையில், ஆசிரியை வசந்த பிரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் திருவிடைமருதூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம் சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல் இவரது மகள் 25வயதான இளம்பெண் வசந்தப்பிரியா கும்பகோணம் செட்டி மண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். காலை பள்ளிக்கு வந்த பிரியா மாலையில் இளைஞர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது அந்த நபர் சிறிய கத்தியால் வசந்தப்பிரியாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

ரத்தம் சொட்ட சொட்ட அலறியப்படி சாலையிலேயே விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸ் வசந்தப்பிரியாவின் உடலை மீட்டனர், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அவரது மாமன் மகன் நதகுமாரை போலீசார் கைது செய்துள்ளார்.

ஒருதலை காதலால் நடைபெற்ற சம்பவம் என்று கூறப்படுகிறது. வசந்த பிரியாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து சில தினங்கள் ஆன நிலையில் நேற்றுபள்ளி முடிந்து திரும்பி வரும்போது பள்ளி வாசலில் பைக்கில் அழைத்து சென்றுள்ளது அங்குள்ள சிசிடிவில் பதிவாகியுள்ளது. 

விசாரணையில் பைக்யில் சென்றவர் நந்தகுமார் என்றும், அவர் வசந்தபிரியாவின் மாமான் மகன் என்றும் தெரிய வந்தது, ஒருதலை காதலால் பிரியாவின் நிச்சயதார்த்தம் முடிந்ததும் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் வசந்தபிரியாவை திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார் ஆனால் அதற்கு மறுத்துள்ளார் வசந்த பிரியா. இதனால் கோபமடைந்த நந்தகுமார் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார். திட்டக்குடியில் தலைமறைவாக இருந்த அவரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்

More News >>