ஷாரூக்கானின் ஜீரோ டிரெய்லர் ரிலீஸ்!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.30 மணிக்கு ரிலீசாகியுள்ளது.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடித்துள்ள ஜீரோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானின் 53வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜீரோ டிரெய்லர் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக மாற்றியுள்ளது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷர்மா நடித்துள்ளார். இவர் விரும்பும் காதலியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். காதலுக்கு அழகு முக்கியமல்ல அன்பு தான் முக்கியம் என்ற ஒன்லைன் கொண்டு படம் விண்வெளி ராக்கெட் வரை பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜீரோ படத்தின் டிரெய்லர் சாதனையை நாளை ரிலீசாகும் 2.0 டிரெய்லர் முறியடிக்குமா என்பதை ஆவலுடன் எதிர்நோக்குவோம்!

ஷாரூக்கான் ஒரு சிறந்த நடிகர் என்பதை ஒவ்வொரு பிரேமில் நிரூபித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஜீரோ அல்ல ஹீரோ!

More News >>