இன்னும் 8 நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2: வெற்றிக்கான வழிமுறைகள்

3 வருட இடைவெளியில் நடபெறபோகும் தேர்வில் வெற்றி பெற நமது கையில் இன்னும் எட்டு நாள்கள் உள்ளது. இந்த எட்டு நாட்களை சரியாக் பிரித்து படித்தால் போதும், குரூப் 2 முதல் நிலையில் வெற்றி பெறலாம்.

முதலில் மொழிப்பாடம் தமிழ் அல்லது ஆங்கிலம் தேர்ந்தெடுத்திருப்பிர்கள், பொதுதமிழில் 90க்கு மேல் மதிப்பெண் வாங்கிவிட்டால் போதும் தேர்வில் நிங்கள் வெற்றி பெறுவது உறுதி அதனால் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்/ஆங்கிலம் புத்தகம் முழுவதுமாக படித்து விட வேண்டும், பழைய புத்தகம் படித்தால் போதுமானது புதிய புத்தகம் படித்தால் கூடுதல் நலம். தேர்வில் எளிதில் வெற்றி பெற மொழிப்பாடமே கைகொடுக்கும். பொது அறிவு பேப்பரை எடுத்துக்கொண்டால் அதில் 25மதிப்பெண்களுக்கு கணிதம்,அறிவுத்திறன் கேள்விகள் இருக்கும் அதில் கவனம் செலுத்தினால் கூடுதல் மதிப்பெண் பெறலாம். நடப்பு நிகழ்வுகள், சமீபத்தில் நடந்த அரசு சமீட், விளையாட்டு நிகழ்வுகள் அரசியல் நிகழ்வுகள்,முக்கியமான கருத்தரங்கம், முக்கியமான் உலக நடப்புகள் அனைத்தையும் படிக்க வேண்டும் இதற்காக நிங்கள் தயார் செய்து வைத்திருக்கும் தகவல்களை படியுங்கள் அல்லது தொகுத்து விற்பனைசெய்யும் நிறுவனங்களிடம் வாங்கி படியுங்கள் அது உங்கள் நேரத்தை சேமிக்கும். மேலும் அரசியல் அமைப்பு, பொருளாதாரம் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள வரலாறு,புவியல் அனைத்தையும் படியுங்கள். அறிவியல் முன்பே படித்து இருந்து நேரம் இருந்தால் படிக்கலாம் புதிதாக படிப்பவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்வது கடினம். பழைய தேர்வுத்தாள்கள் ஆன்லைன்யில் கிடைக்கும் அதனை மீண்டும் மீண்டும் படித்துகொண்டே இருங்கள். ஷார்ட்கட் முறையில் மனப்பாடம் செய்துவைத்துள்ளைதை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். நடப்பு நிகழ்வுகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் ராஜீவ்காந்தி கொலை வழக்கு அதிகம் பேசப்பட்டது அதனால் அதன் வரலாறு முழுவதும் படிக்க வேண்டும். அதுபோல் வாஜ்பாய் சாதனை,கலைஞரின் சாதனைகள்,சமீபத்தில் ஏற்பட்ட பெரும் இயற்கை சேதம் நடைபெற்ற இடம் அதன் பெயர் போன்ற அனைத்தையும் ஒருமுறையாவது படித்து தெரிந்துகொள்ள வேண்டும். 

யுத்ததிற்கு ஆயத்தமானால் தான் வெற்றி கிடையும், உங்களை ஆயத்தப்படுத்திகொள்ளுங்கள். தைரியமாக தேர்வை எதிர்கொள்ளுங்கள், வெற்றிபெற வாழ்த்துக்கள்.

More News >>