ரஜினியின் நடிப்பில் மிரட்டும் 2.0 டிரைலர்!
ரஜினி நடிப்பில், மிகப்பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 2.0 திரைப்படத்தின் டிரைலர் இன்று நண்பகல் 12.51 மணிக்கு இயக்குனர் சங்கர்,ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய்குமார் இணைந்து வெளியிட்டனர். இதற்கான நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்ஷய் குமார் தமிழில் பேசியது அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்தது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயமோகன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 3 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது.உலகில் முதல் முறையாக இந்த படத்தில் 4D ஒலியமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
2.0 படத்தின் டிரைலர் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய முன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் 2.0 குழு உட்டபட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.ரஜினிக்கு கமல்,ரவிக்குமார் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்