யுரி படம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்: யாமி கெளதம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த, பயங்கரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் இந்திய ராணுவ படையினர், நெருங்கி சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனும் துள்ளிய தாக்குதல் நடத்தி அழித்தனர். அதன் வீடியோக்களையும் மத்திய அரசு வெளியிட்டது.

இந்நிலையில், இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை மையமாக வைத்து பாலிவுட்டில் புதிய படம் உருவாகியுள்ளது. யுரி என்ற அந்த படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது என நாயகி யாமி கெளதம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் கமோண்டா நாயகனாக விக்கி கவுஷல் நடித்துள்ளார். ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சமீபத்தில், படம் குறித்த பேட்டியில், பேசிய யாமி கெளதம், இந்த படம் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய படமாக அமைந்துள்ளது. படத்தில் நடித்ததில் மிகவும் பெருமை படுகிறேன். என் திரையுலக வாழ்க்கைக்கு இந்த ஒரு படம் போதும் என்றார்.

More News >>