ரெக்கார்ட் பிரேக் செய்த கேரள விஜய் ரசிகர்கள்!
கேரளாவின் கொல்லம் பகுதியில் நடிகர் விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து உலக சாதனை படைத்துள்ளனர்.
உலகிலேயே எந்த நடிகருக்கும் 175 அடி உயர கட்டவுட் வைத்தது கிடையாது. மெர்சல் படத்தில் விஜய்க்கு 125 அடி உயர கட்டவுட் வைத்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், கேராளாவில் உள்ள கொல்லம் பகுதியின் விஜய் ரசிகர்கள் 175 அடி உயர கட்டவுட்டை வைத்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டு ஹீரோ ஒருத்தருக்கு கேரளாவில் இவ்ளோ பெரிய கட்டவுட் என்பதும் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு இதில் இருந்தே புலப்படுகிறது.
சர்கார் படம் தீபாவளியன்று வெளியாவதை முன்னிட்டு, படத்தின் ஆரம்ப காட்சியில் தனி விமானத்தில் இருந்து விஜய் இறங்கி நடந்து வரும் புகைப்படத்தை இவ்ளோ பெரிய ராட்சத கட்டவுட்டாக வைத்துள்ளனர்.
மேலும், இந்த தீபாவளிக்கு சர்கார் விஜய் புகைப்படம் போட்ட சர்கார் வெடிகளும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த தீபாவளி விஜய் ரசிகர்கள் சர்கார் வெடிகளை வாங்கி வெடிப்பார்கள் என எண்ணிய பட்டாசு கடைக்காரர்கள் இந்த புதிய வியாபார யுத்தியையும் கையாண்டுள்ளனர்.