வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் என்ன ஆகும்?
சிலர் காலை உணவிற்கு பதில் பழங்களை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அப்படி வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என பார்ப்போம்.
காலை உணவாக பழங்ளை சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பழங்களை காலை உணவாக உண்பதால்,உடலுக்கு வேண்டிய ஆண்டி- ஆக்ஸிடன்ட் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
எடையைக் குறைக்க டயட்டில் உள்ளவர்கள், காலையில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் பெர்ரி பழங்கள் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிடுவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
காலை வேளையில் பழங்களை சாப்பிடும் போது, உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். குறிப்பாக செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும்.
காலையில் பழங்களை பலவாறு சாப்பிடலாம். உதாரணமாக ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும் அதனுடன் பெர்ரி பழங்கள், கிவி பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.
இன்னும் சிறப்பான ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், பப்பாளி மற்றும் ஆப்பிளை ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.
காலை உணவாக ஜூஸ் குடிக்க நினைத்தால், பெர்ரி பழங்கள் மற்றும் திராட்சையுடன் தயிர் சேர்த்து அரைத்து, இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து குடியுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு சமநிலையில் அனைத்து சத்துக்களையும் பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். அதற்கு காலையில் மாதுளை ஜூஸ் குடிப்பது நல்லது.