ஆசிரியையை கொலை செய்தது எப்படி? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
திருவிடைமருதூரில் ஆசிரியை வசந்த பிரியா கொலை வழக்கில் அவரை கொலை செய்து விட்டுத் தப்பிய அவரது மாமா மகன் நந்தகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒருதலை காதலால் நடைபெற்ற சம்பவம் என்று கூறப்பட்டது. வசந்த பிரியாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து சில தினங்கள் ஆன நிலையில் நேற்றுபள்ளி முடிந்து திரும்பி வரும்போது பள்ளி வாசலில் பைக்கில் அழைத்து சென்றுள்ளது அங்குள்ள சிசிடிவில் பதிவாகியுள்ளது.
விசாரணையில் பைக்யில் சென்றவர் நந்தகுமார் என்றும், அவர் வசந்தபிரியாவின் மாமன் மகன் என்றும் தெரிய வந்தது, பிரியாவின் நிச்சயதார்த்தம் முடிந்ததும் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் வசந்தபிரியாவை திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார் ஆனால் அதற்கு மறுத்துள்ளார் வசந்த பிரியா. இதனால் கோபமடைந்த நந்தகுமார் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார். திட்டக்குடியில் தலைமறைவாக இருந்த அவரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் நந்தகுமார் அளித்த வாக்குமுலம் இதுதான்:
"நானும் வசந்த பிரியாவும் காதலித்து வந்தோம், நான் பிரியாவை விட 6 மாதம் சின்னப்பையன், இதனால் வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற தயக்கம் இருந்தது, இந்நிலையில் தான் அவளுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்தது. இதை கேள்விப்பட்ட உடன் நான் அதிர்ச்சி அடைந்தேன், அதனால் நேற்று முன் தினம் பிரியா வேலைக்கு செல்லும் பள்ளிக்கு சென்று அவளிடம் பேசவேண்டும் என்று கூறி வற்புறுத்தி அவரை பைக்கில் அழைத்து சென்றேன்.
ஆள் நடமாட்டம் இல்லாத காவிரி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று, அங்கு என்னை திருமணம் செய்ய சொல்லி கெஞ்சினேன் ஆனால் பிரியா பிடிவாதமாக மறுப்பு தெரிவித்தார். அவர் என்னை ஏமாற்றியதால் கோபத்தில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தேன், பிறகு பயந்து அங்கிருந்து திட்டக் குடிக்கு உறவினர் வீட்டுக்கு தப்பி சென்றேன். எனது உறவினர்கள் வசந்தபிரியாவை யாரோ கொலை செய்து விட்டனர் என கூறினர். பிறகு எதும் தெரியாததுபோல் எனது உறவினர்களுடன் கும்பகோணத்துக்கு சென்றேன்.
கும்பகோணம் செல்லும் வழியிலே பயத்தில் நான் தான் பிரியாவை கொன்றேன் என உண்மையை கூறிவிட்டேன். வரும் வழியிலே திருப்பனந்தாள் அருகே போலீசார் என்னை பிடித்து விட்டனர்". என்று கூறியுள்ளார்