ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜம்மு ஸ்ரீநகர் நெஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. காஷ்மீரில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று கடும் உறைபனி படர்ந்து காணப்பட்ட்து. இதனால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை எங்கும் உள்ள உறைபனியால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவகர் கணமாய் பகுதியில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்களில் வந்த 300க்கும் மேற்பட்டோர் பாதை தெரியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.