aNEETa: நீட் எழுதும் மாணவர்களுக்கு புதிய செயலி மாணவி சாதனை!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக, டெல்லியைச் சேர்ந்த தமிழக மாணவி இனியாள் ‘aNEETa' என்ற புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டார்கள், நீட் தேர்வு முறை,தமிழ் கேள்வியில் தவறு, வெளி மா நிலத்தில் தேர்வு மையம் என பல போராட்டங்களுக்கு பிறகு சிலர் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பலர் தேல்வியை தழுவினார்கள்.

அரியலூர் மாணவி அனிதா, 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவ கனவு கலைந்து தனது உயிரைய் மாய்த்துக்கொண்டது தமிழகத்தை சோகத்தில் ஆழ்தியது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு அக்டோபர் 30தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி இனியாள் அனிதாவின் நினைவாக 'aNEETa" என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியில் நீட் தேர்வுக்கான தகவல்கள் மற்றும் அனைத்து மாதிரி வினாதாள்களும் இடம்பெற்றுள்ளது. மாணவி இனியாள் ஐபிஎஸ் அதிகாரி ஜெகதீசன் மகள் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து மாணவி இனியாள் கூறியது:

"12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்தும் மாணவி அனிதாவால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. நீட் தேர்வு எழுத பயிற்சி வேண்டும் என்பது புரிந்தது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலியை ‘aNEETa’ உருவாக்கியுள்ளேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மூலமாக நவம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும். வரும் மே மாதம் 5ம் தேதியன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. சென்னை, வேலூர், நெல்லை, தஞ்சை, திருவள்ளூர், திருச்சி, நாகர்கோவில், சேலம், கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாமக்கல் ஆகிய மையங்களில் நீட் தேர்வு நடைபெறும்.

 

More News >>