குளிர்காலத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள என்ன செய்யலாம்?

குளிர்காலம் என்றாலே கஷ்டம்தான், புதுபுது நோய்கள் உலாவக் கூடிய காலம்தான் குளிர்காலம். சளி தொல்லை ஒருபுறம். காய்ச்சல் மற்றும் இருமல் மற்றொருபுறம். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

பனிதாக்கத்திலிருந்து நமது சுவாச உறுப்புகளை காத்துக்கொள்ள வீட்டிலிருக்கும் பொருட்களே போதும், அவை என்ன என்று பார்ப்போம்.

சளி தொந்தரவிற்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும். வலியையும் கட்டுப்படுத்தும். சளி பிரச்சினையையும் தீர்க்கும்.

சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப்படுத்திவழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்து பருகலாம்.

மார்புசளிக்கு தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சூடாக்கி மார்பில் தடவி வரலாம். ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வரலாம்.

குளிர்காலத்தில் லவங்கபட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சியையும் சேர்த்து கொள்வதன்மூலம் சளி தொந்தரவில் இருந்து விடுபடலாம்.

காலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து பருகி வர தொண்டைக்கு இதமாக இருக்கும்.

ஏலக்காயை பொடித்து சுடுநீரில் கலந்து டீயாக தயாரித்து பரிமாறலாம். இது குளிர்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்கும்.

இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகிவருவதன் மூலம் மார்பு சளி தீரும்.

ஜாதிக்காய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. சூடான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து அதனுடன் ஜாதிக்காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம். இது குளிர்கால நோய்களை தடுக்கும்.

குளிர்காலத்தில் மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகி வர பல நோய் தொற்றுகள் வராமல் காக்கலாம்.

More News >>