தீபாவளி ஸ்பெஷல் : பப்பாளி பழ அல்வா..
கொஞ்சம் மாறுதலாக இந்த தீபாவளிக்கு ஆரோக்கியம் நிறைந்த பப்பாளி பழ அல்வாவை செய்து தீபாவளியைக் கொண்டாடுவோம்.
தேவையானப் பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் - 3 கப்
சர்க்கரை - 3/4 கப்.
நெய் - 4 தேக்கரண்டி
பால் - காய்ச்சியது 1/2 கப்
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி - 7
பாதாம் பருப்பு - 7
செய்முறை:
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். பாதாம் பருப்பை மெலிதாக நறுக்கி கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள். பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி நன்கு குழைந்து வரும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். அல்வா சுண்டி வரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவிடவும். பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொழுது முந்திரி, பாதாம், ஏலப் பொடி தூவி கிளறி இறக்கவும்.8. பப்பாளி அல்வா தயார்